தூத்துக்குடியில் ஊரடங்கால் களை இழந்த படகு குழாம்

கொரோனா ஊரடங்கின் காரணமாக தூத்துக்குடியில் படகு குழாம் களை இழந்து காணப்படுகிறது.

Update: 2020-04-24 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களாக பூங்காக்கள் மட்டுமே இருந்து வந்தது. இதனால் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் இயற்கையாக கடல் நீர் குளம் போல் தேங்கி கிடக்கும் பகுதியில் படகு குழாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் படகு குழாம் செயல்பட தொடங்கியது.

இங்கு தினந்தோறும் மக்கள் அதிக அளவில் வந்து படகுகளில் சவாரி செய்து வந்தனர். இங்கு உணவகம் உள்ளிட்ட மக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாக அமைந்து இருந்தது. விடுமுறை நாட்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்து வந்தனர்.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, ராஜாஜி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. பூங்காக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

இதேபோன்று அனைத்து கடைகள், சினிமா தியேட்டர்கள், படகு குழாம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த வகையில் படகு குழாம் அமைந்து உள்ள பீச் ரோடும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

இதனால் படகு குழாம் களை இழந்து காணப்படுகிறது. அங்கு உள்ள படகுகள் கரையோரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக கட்டி வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்