ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,380 பேர் மீது வழக்குப்பதிவு 3,508 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் ஊரங்கை மீறியதாக 5,380 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,508 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-04-24 03:58 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் ஊரங்கை மீறியதாக 5,380 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,508 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5,380 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 5,380 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 3,508 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 63 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மது குற்றங்களை தடுக்கும் விதமாக தனிப்படையினர் மூலம் 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

447 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு வந்தவர்கள் 4,750 பேர் கண்டறியப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 4,459 பேரின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்துள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்