சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த மேலும் 4 பேர் குணமடைந்தனர்

சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-04-23 22:45 GMT
சேலம், 

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் உள்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

இதனால் மீதமுள்ள 14 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் தாரமங்கலம், எடப்பாடி, களரம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 4 பேர் குணமடைந்தனர். அவர்கள் நேற்று மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது தனிமை வார்டில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்