தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் - போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வழங்கினார்

தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படையினருக்கு அத்தியாவசிய பொருட்களை, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வழங்கினார்.

Update: 2020-04-23 23:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் 550 பேருக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி 10 கிலோ, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, மைதா, கோதுமை மாவு, வறுகடலை, வெங்காயம், சமையல் எண்ணெய், உப்பு ஆகியவை தலா 1 கிலோ அடங்கிய நிவாரண பொருட்களின் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலந்து கொண்டு பொருட்களை ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்