சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனியார் நிறுவன அலுவலகத்துக்கு ‘சீல்’

திண்டுக்கல் மாநகராட்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளை, அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து வருகின்றனர்.

Update: 2020-04-23 08:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் மற்றும் அதிகாரிகள் பாரதிபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும் மேட்டுப்பட்டியில் வீட்டில் வைத்து ஆட்டை அறுத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடையில் இறைச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து 10 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்