நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்த டாக்டர்கள்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர்.;

Update: 2020-04-23 06:49 GMT
நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர்.

கண்டனம்

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், அவரது உடல் அடக்கத்தின்போது நடந்த விரும்பத்தகாத நடவடிக்கையை கண்டித்தும், டாக்டர்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு வந்தனர்.

நெல்லையில்...

அதேபோல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று காலை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

இதுகுறித்து டாக்டர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘கொரோனா தடுப்பு பணியின்போது ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால், டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், தனியார் துறை மருத்துவர்களுக்கும் அவர்களது இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும். கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினர்.

மேலும் செய்திகள்