திருப்பத்தூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து - கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்கும் வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவை கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்கும் வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-22 22:15 GMT
திருப்பத்தூர்,

கொரோனா தொற்று பாதிப்பால் திருப்பத்தூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து கிடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து தங்குத்தடையின்றி கிடைக்க வாகனம் மூலம் அந்தந்தக் கிராமங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு பொ.சுஜாதா தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர்கள் ஜெயசுதா, சுவஸ்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்று விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவை கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி.ரமேஷ், உரக்கடைகள் சங்கத் தலைவர் குமரேசன், அண்ணாமலை, அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 295 தனியார் கடைகள் மற்றும் வாகனம் மூலம் காலை 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணிவரை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் இதேபோல 185 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அங்கேயே விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்