கொரோனா பாதிப்பு: ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
கொரோனா பாதிப்பு காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு செய்தார்.
ஏப்.
கொரோனா பாதிப்பு காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு செய்தார்.
கொரோனா பாதிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 4 பேர் டெல்லி சென்று திரும்பினர். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக முத்துப்பேட்டை காளியம்மன் கோவில் தெரு, நியூபஜார், சீத்தாவாடி சந்து, பேட்டை சாலை ஆகிய பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியே செல்வதற்கும், வெளி ஆட்கள் அந்த பகுதிக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. 15 நாட்களுக்கு மேலாக அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
உதவி கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் கொரோனா பாதிப்பு காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளை திருவாரூர் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள் குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன், வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.