முக கவசம் அணியாமல் சுற்றிய 1,330 பேர் மீது வழக்கு

மும்பையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 1,330 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-04-21 23:17 GMT
மும்பை,

நாட்டிலேயே மும்பை நகரில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதை மும்பை மாநகராட்சி கட்டாயமாக்கியது. இந்த உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது.

இருப்பினும் மாநகராட்சியின் இந்த உத்தரவை மதிக்காமல் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் பலரும் முக கவசம் இன்றி வெளியில் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

1,330 பேர் மீது வழக்குப்பதிவு

அதன்படி இந்த உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 8-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான 13 நாளில் முக கவசம் இன்றி வெளியில் வந்ததாக 1,330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மத்திய, மேற்கு மற்றும் வடக்கு மும்பை பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8 ஆயிரத்து 679 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களில் 5 ஆயிரத்து 505 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்