ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது

ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக் கையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-04-21 06:29 GMT
ஜோலார்பேட்டை,

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை கட்டுப் படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவித்து, மற்ற பகுதிகளில் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிட்டுள்ளன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலு வலகம் வழக்கம்போல் இயங்கலாம் என கலெக்டர் சிவன்அருள் அறிவித்தார்.

அதன்படி ஜோலார் பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதி களுக்குட்பட்ட பத்திரப் பதிவும், நாட்டறம்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாட்டறம்பள்ளி, வாணியம் பாடி பகுதிகளுக்குட்பட்ட பத்திரப் பதிவும் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அந்தந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகள் பணிக்கு வந்தனர். அவர்களுடைய வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. அதிகாரிகள் அலுவலகங் களுக்கு வந்து பலமணி நேரம் ஆகியும் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வரவில்லை. மதியத்துக்குமேல் ஒருசிலர் வந்தனர்.

பத்திரப்பதிவு செய்ய வருவோருக்கு ஒரு மணி நேரத்துக்கு நான்கு டோக்கன் மட்டுமே பதிவு செய்ய முடியும், அலுவலகம் உள்ளே வருவதற்கு முன்பு அனைவரும் முகக் கவசம் அணிந்தும், கைகளை கழுவிய பின்பும் வர வேண்டும் என அறிவிக்கப் பட்டது. நிலம் வாங்குபவர், விற்பவர், இரண்டு சாட்சிகளை தவிர்த்து மற்றவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை, ஒருவரின் பத்திரப்பதிவு முடிந்த பிறகு அடுத்ததாக வரும் நபர்கள் வெளியில் காத்திருந்து, அதன் பின்னரே உள்ளே வர வேண்டும் என அதிகாரிகள் அறிவித் திருந்தனர்.

ஆனால் பத்திரப்பதிவு செய்ய அலுவலகம் திறக்கப் பட்டும் வீடு, வீட்டுமனை, நிலம் ஆகியவற்றை வாங்குபவர்களும், விற் பவர்களும் பணப் பரிமாற்றம் செய்ய திருப்பத்தூர் பகுதியில் வங்கிகள் திருக் கப்படாததாலும், போக் குவரத்து வசதி இல்லாததாலும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஜோலார் பேட்டை பகுதியில் வங்கிகள் திறக்கப்படாததால் சார் பதிவாளர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்