போடி அருகே, சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

போடி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-04-20 22:00 GMT
போடி,

போடி அருகே சின்னமுடக்கு மலைப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக குரங்கணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது நல்லுகுண்டு பாறை என்ற இடத்தின் அருகில் 6 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். 

இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க சென்றனர். அப்போது போலீசாரை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். 3 பேர் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ராம்குமார் (வயது 39), ஸ்டாலின் (33), மீனாவிலக்கை சேர்ந்த அருண் (35) என்பதும், தப்பியோடிய நபர்கள் ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த நவநீதன், போடி தோப்புப்பட்டியை சேர்ந்த சுந்தரராஜ், அணைக்கரைப்பட்டியை சேர்ந்த செந்தில் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து சாராயம் காய்ச்சியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, ராம்குமார், ஸ்டாலின், அருண் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நவநீதன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்