100 பேருக்கு நிவாரண பொருட்கள் போலீசார் சார்பில் வழங்கப்பட்டது
நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலையம் சார்பில் ஏழைகள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலையம் சார்பில் ஏழைகள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்கள்
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வருமானம் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அதிலும் ஏழை மக்களின் நிலை மிகவும் மோசம் அடைந்து இருக்கிறது. தினமும் உணவுக்கே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதே போல நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் சார்பில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏழை மக்கள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. அதாவது 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், தின்பண்டங்கள் மற்றும் 3 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
உதவி சூப்பிரண்டு
நிகழ்ச்சியில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் பங்கேற்று ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மக்கள் அரசின் உத்தரவை கடைப்பிடித்து சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைத்து போலீசாரும், மக்களும் முக கவசம் அணிந்திருந்தனர்.
மணவாளக்குறிச்சி
அதேபோல் மணவாளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு போலீஸ்துறை சார்பில் அரிசி, காய்கறி வழங்கும் நிகழ்ச்சி மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்தது. இதில் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி கலந்து கொண்டு ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார்.
அப்போது, இன்ஸ்பெக்டர் தங்கராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தாரணி, மின்வாரிய உதவி பொறியாளர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.