திருவள்ளூரில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூரில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-04-20 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தொற்றினை கண்டறியும் பரிசோதனை கருவி வாயிலாக சுகாதார பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கண்டறிய உதவும் ரேபிட் பரிசோதனை கருவி மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் 3 பேர், பெண்கள் 14 பேர், ஆண்கள் 29 பேர் என 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

மொத்தம் 4 ஆயிரத்து 118 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார். அவருடன் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்