ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு; பொதுமக்கள் திடீர் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு

ஊரடங்கு காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தூத்துக்குடியில் நேற்று பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத் தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-20 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்டன்புரம் பகுதியும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளன.

இந்த பகுதியில் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்ற னர். அங்கு இருந்து மக்கள் வெளியில் செல்ல முடியாததால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி பொதுமக்கள் சுமார் 50 பேர் திடீரென திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும், விரைவில் பாதைகள் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். 

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்