பாளையங்கோட்டையில் மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாளையங்கோட்டையில் மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். தற்போது இறைச்சி கடைகள் ஆங்காங்கே நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக டவுனில் 2 இடங்களிலும், பாளையங்கோட்டையில் ஓரிடத்திலும் மட்டுமே இறைச்சி கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அலைமோதிய கூட்டம்
இதையொட்டி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் மீன்களை வாங்கிச்சென்றனர். இதே போல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் இறைச்சிகளை வாங்கிச்சென்றனர்.
இந்த நிலையில் தடை உத்தரவை மீறி மற்ற இடங்களில் இறைச்சி கடைகள் நடத் தியவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.