ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம், நிவாரண பொருட்கள் வினியோகம்

ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம், நிவாரண பொருட்களை நிர்வாக பங்குதாரர் இரா.பாலகிருஷ்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது.;

Update: 2020-04-20 00:31 GMT
நாகர்கோவில், 

ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம், நிவாரண பொருட்களை நிர்வாக பங்குதாரர் இரா.பாலகிருஷ்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு நிவாரணம்

நாகர்கோவில் ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்கள் சார்பில் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம், முக கவசம், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரணமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்களின் நிர்வாக பங்குதாரர் இரா.பாலகிருஷ்ணன் வீட்டில் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிவாரணமானது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நிர்வாக பங்குதாரர்

நிகழ்ச்சிக்கு ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்களின் நிர்வாக பங்குதாரர் இரா.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிறுவனங்களின் மூத்த வக்கீல் அசோகன் கலந்து கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.

இதுவரை ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்களில் வேலை செய்து வரும் 287 தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று, ஆர்.பி.ஆர். குரூப் நிறுவனங்கள் சார்பில் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஒகி புயல், கேரளாவில் வெள்ள சேதம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது என்று நிர்வாக பங்குதாரர் இரா.பாலகிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியில் ராஜா, அய்யாபிள்ளை, ஜார்ஜ், ஸ்டாலின், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் அரசு உத்தரவுபடி முக கவசம் அணிந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்