விசா விதிமுறையை மீறிய தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை - மந்திரி அனில் தேஷ்முக் தகவல்

விசா விதிமுறையை மீறிய தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார்.;

Update:2020-04-20 04:52 IST
மும்பை, 

டெல்லியில் கடந்த மாதம் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட பிறகு மராட்டியம் வந்த பலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் விசா விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, ‘‘தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் சிலர் விசா விதிகளை மீறியது தெரியவந்து உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். விசா விதிகளை மீறியதாக இதுவரை 156 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம்’’ என்றார்.

வெளிமாநில தொழிலாளர்களை அவா்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியிடம் பேசினார். ஆனால் மற்ற மாநில முதல்-மந்திரிகள் மாநில எல்லைகளை திறக்க மறுத்துவிட்டனர் எனவும் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

இதேபோல ஜெயில் ஊழியர்கள் சிறைச்சாலைகளில் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால், வெளியில் இருந்து கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாது எனவும் அனில் தேஷ்முக் கூறினார்.

மேலும் செய்திகள்