சாலையில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.;
அரியலூர்,
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனையொட்டி அரியலூர் நகராட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சின்னகடை தெருவில் கடைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை நகராட்சி ஆணையர் குமரன் பார்வையிட்டார். அப்போது பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடிக்காத நபர்களுக்கும், சாலைகளில் எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்யும் கடை வியாபாரிகளுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் அபராதம் விதிப்பது இன்று (அதாவது நேற்று) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.