மானூர்- திசையன்விளையில் தடையை மீறிய 25 பேர் கைது - கார்- மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

மானூர், திசையன்விளையில் தடையை மீறிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2020-04-17 19:45 GMT
மானூர், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமையன்பட்டியை சேர்ந்த சேதுராமன் (வயது 45) தடையை மீறி கடையை திறந்து வைத்திருந்தார். உடனே மானூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற மோகன் (25), கோவில்பட்டி ஆத்திகுளத்தை சேர்ந்த உதயகுமார் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் உவரி அருகே உள்ள நவலடி பகுதியில் கார், மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த கடகுளத்தை சேர்ந்த அந்தோணி அஜித் (23), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த முருகன் (24), சண்முகபுரத்தை சேர்ந்த ஆத்திமுத்து (48), அவருடைய மகன் பிரவின் (22) ஆகிய 4 பேரை உவரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காரையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் உவரியை சேர்ந்த ஜெசி (23), கிருஷ்ணன் (26), செட்டியூரை சேர்ந்த பிரபு (36), கூட்டப்பனை நவீன் (32), அந்தோணிதாசன் சாரோன் (23) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் திசையன்விளை பஜார் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சுற்றித் திரிந்ததாக காரம்பாடு பரமசிவன் (37), வடக்கு விஜயநாராயணம் அம்மன்முத்து (28), ரம்மதபுரம் விக்னேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோக்கள் பறிமுதல்

திசையன்விளை பஜார் பகுதியில் ஆட்டோக்களை ஓட்டிவந்த இடிந்தகரையை சேர்ந்த செந்தில்முருகன் (33), விக்னேஷ் (24), உவரியை சேர்ந்த கவுதமன் (30), ராகேஷ் (25), கூத்தன்குழியை சேர்ந்த பெப்பிஸ் (53), தோப்புவிளையை சேர்ந்த அகஸ்டின் (53), காரிகோவிலை சேர்ந்த உத்திரகுமார் (23), திசையன்விளையை சேர்ந்த எமர்சன் கென்னடி (48), இடையன்குடியை சேர்ந்த ஜெய ஆனந்த் (32) மற்றும் ஒருவர் உள்பட 10 பேரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்