தாராபுரம் அருகே ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 80 பேர் மீது வழக்கு - 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தாராபுரம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 70 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-04-14 22:15 GMT
தாராபுரம், 

கொரோனா தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் நிலையில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் மக்கள் நோய் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிச்செல்ல குடும்பத்தில் ஒருவர் வெளியே வந்து செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்து வந்தனர். ஆனால் ஊரங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிவதும், சாலைகளில் நண்பர்களுடன் சுற்றித்திரிவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் அலங்கியம் உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதில் விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 70 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்