சேலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு - 3 கிலோ மீட்டர் தூரம் கடைகள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சேலத்தில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.

Update: 2020-04-13 06:37 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களது செல்போன் எண்ணுக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தினமும் தொடர்பு கொண்டு அவர்களது உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சூரமங்கலம் மண்டலம் 2-வது வார்டு அம்மாபாளையம் மெயின் ரோடு, கே.கே.நகர், பொன்நகர், 19-வது வார்டில் ஆசாத் நகர், தர்ம நகர், சுப்ரமணிய நகர், அம்மாபாளையம் மெயின்ரோடு பகுதி ஆகிய 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 29-வது வார்டில் ஜம்புலிங்கம் தெரு, தொட்டு சந்திரய்யர் தெரு, தேவாங்கபுரம் புதுத்தெரு, குமாரசாமி தெரு, வைத்தி தெரு, அர்த்தனாரி தெரு, 30-வது வார்டில் ஏ.வி.அய்யர் தெரு, பங்களா தெரு, மாணிக்கம் தெரு, சையத் மாதர் தெரு, கண்ணார தெரு, நாகேஷ் தெரு, மஜித் தெரு, பைகார தெரு, சாய்பாபா தெரு, லாடகார தெரு, அப்புசெட்டி தெரு, 31-வது வார்டில் சின்னசாமி தெரு, ஜலால்கான் தெரு, துவால் அஹமத் தெரு, குண்டுபோடும் தெரு, அண்ணா நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதி, ஜானியன் தெரு, சையத் காஷிம் தெரு, முகமத் காஷிம் தெரு, வெங்கடசாமி தெரு, பால் தெரு ஆகிய 27 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அம்மாபேட்டை மண்டலத்தில் 33-வது வார்டில் முத்துவள்ளி யாவூப் தெரு, முகமத்புறா, பழைய மார்க்கெட் தெரு, லட்சுமி நகர், சின்னக்கடை வீதி, ஆசாத் தெரு, வ.உ.சி மார்க்கெட், 36-வது வார்டில் பட்டநாயக்கர் காடு தெரு எண்.1, 2 மற்றும் 3, 39-வது வார்டில் நரசிம்மன் தெரு, வையாபுரி தெரு, சவுண்டம்மன் கோவில் தெரு, 43-வது வார்டில் சீனிவாசா நகர், பாலவிநாயகர் தெரு, அண்ணா நகர், அழகு நகர், தரணி கார்டன், சன்னியாசிகுண்டு மெயின் ரோடு, 44-வது வார்டில் காளிக்கவுண்டர் காடு, களரம்பட்டி மெயின் ரோடு ஆகிய 19 இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 46-வது வார்டில் நரசிங்கபுரம் தெரு, 48-வது வார்டில் நெய்மண்டி அருணாசலம் தெரு எண்.2, தொல்காப்பியர் தெரு, லைன் ரோடு, 56-வது வார்டில் கருங்கல்பட்டி தெரு எண்.1,2,3 மற்றும் 4, பாண்டுரங்க விட்டல் தெரு எண்.1,2,3 மற்றும் 4, களரம்பட்டி தெரு எண்.1,2,3 மற்றும் 4, தெற்கு முனியப்பன் கோவில் தெரு, தெற்கு பிள்ளையார் கோவில் தெரு, செங்கல்பட்டி தெரு எண்.1,2,3 மற்றும் 4, வடக்கு முனியப்பன் கோவில் தெரு, கல்கி தெரு, 57-வது வார்டில் களரம்பட்டி மெயின் ரோடு (தேவி தியேட்டர் முதல் எருமாபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் வரை), அண்ணா வாத்தியார் தெரு, களரம்பட்டி கிழக்கு தெரு, பண்டிதர் நேரு தெரு, நேதாஜி நகர் ஆகிய 17 இடங்கள் என சேலம் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 4 மண்டலங்களிலும் மொத்தம் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட பகுதியினை சுற்றி 3 கிலோ மீட்டர் தூர அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் உள்பட எவ்வித கடைகளும் செயல்பட கூடாது என்று தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சியில் 14 வார்டுகளில் 70 தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்படுகிறது.

இதனிடையே, தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தினமும் அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கு 14 வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருந்து, மளிகை, காய்கறி போன்ற பொருட்கள் தேவைப்பட்டால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வகையில் செல்போன் எண்கள் விவரம் அந்தந்த பகுதிகளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.

எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளை சுற்றி 3 கிலோ மீட்டர் தூர அளவிலுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் தமிழக அரசு உத்தரவை கடைபிடித்து, கடைகளை மூடி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் செய்திகள்