ஊத்துக்கோட்டையில் கோழி இறைச்சி கடைக்கு ‘சீல்’
ஊத்துக்கோட்டையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14-ந் தேதி வரை இறைச்சி கடைகளை திறக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தடை விதித்து உள்ளார்.
ஆனால் ஊத்துக்கோட்டை பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள சுதர்சன் தெருவில் தடையை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் யுகந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தடையை மீறி திறந்து இருந்த கோழி இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர். கடை உரிமையாளர் மீது ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தாசில்தார் சீனிவாசன் புகார் செய்தார்.