மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசம் - அமைச்சர் நிலோபர்கபில் வழங்கினார்
வாணியம்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வழங்கினார்.
வாணியம்பாடி,
ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு முககவசம், கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்து கொண்டு முக கவசங்கள், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினார். இதனை மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஆலங்காயம் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு முககவசங்களையும், கிருமி நாசினியையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி தாசில்தார் சிவபிரகாசம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், செயல் அலுவலர் கணேஷ், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் வாணியம்பாடியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு பிஸ்கட், பழங்களை வழங்கினார். மேலும் நரிக்குறவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு சென்று அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினார். அப்போது சமூக பாதுகாப்பு குழுவை சேர்ந்த சமா ஷகீல், சவுக்கத், ஜமியுல்லா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஷமீ ஆகியோர் உடன் இருந்தனர்.