கொரோனா வைரஸ் காரணமாக ‘சீல்’ வைத்த பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு - திருப்பத்தூர் கலெக்டர் வழங்கினார்
திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் வெளியேவராத வகையில் மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள 200 ஏழை குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்க கலெக்டர் வேண்டுகோளை ஏற்று மதரஸே மே ஷாவுல்ஹமித் சார்பில் அரிசி, பருப்பு எண்ணெய், ரவை, மைதா, சர்க்கரை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தாளாளர் முஹம்மத் கலீம் தலைமை தாங்கினார்.
இதில் கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.