கொரோனா பாதித்த அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் 6-வது நாளாக பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேரில் ஆய்வு

கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்து சீல் வைக்கப் பட்டுள்ளதையொட்டி அந்த பகுதி மக்கள் 6-வது நாளாக நேற்று தனிமைப் படுத்தப்பட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-04-07 05:39 GMT
அரியாங்குப்பம், 

அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு டன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு 6-வது நாளாக பொதுமக்கள் வெளியே வர முடியாத அள வுக்கு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் அந்தந்த பகுதியில் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதையொட்டி அரியாங் குப்பம் கோட்டைமேடு சந்திப் பில் சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு ராகுல் அல்வால் பாது காப்பு பணிகள் குறித்து நேற்று காலை நேரில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது ஜெய மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், கொம்யூன் பஞ்சாயத்து, வரு வாய் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு ராகுல் அல்வால் கூறு கையில், ‘சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு தாமாக முன் வந்து உதவிகள் செய்யலாம். சீல் வைக்கப் பட்டுள்ள பகுதிக்கு செல் வோர் வீடு வீடாக மட்டுமே தங்களது உதவிகளை செய்ய வேண்டும். எந்த ஒரு பொருளையும் தொட வேண் டாம். மேலும் அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முன்னதாக காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். சீல் வைக்கப்பட்டுள்ள பகுதியில் வசித்து வரும் போலீசாரும் கண்காணிக்கப்படுவார்கள்’ என்றார்.

அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி கூறியதாவது:-

சீல் வைக்கப்பட்டுள்ள மேற்கு பகுதிக்கு 6-வது நாளாக அப்பகுதிகளின் முகப் பில் 2 இடங்களில் முகாமிடப் பட்டுள்ளது. பகல் இரவாக போலீசார் தொடர்ந்து பாது காப்பு பணியில் இருந்து வரு கின்றனர். அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு, அரசு உதவித்தொகை ரூ.2 ஆயிரம், மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் செய்து தர குழு அமைப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ‘சீல்’ வைக்கப் பட்டுள்ள பகுதியின் கோட் டைமேடு மற்றும் சொர்ணா நகரின் முகப்பில் முகாமிட்டுள் ளனர். இதுதவிர தற்போது அரிசி மற்றும் பழவகைகள் கிடைக்க தற்காலிகமாக 2 இடங்களிலும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பழவகைகள் மற்றும் அரிசி வகைகளை தங் களின் வசதிக்கேற்ப மலிவு விலையில் பெற்றுக் கொள்ள லாம்.

சீல் வைக்கப்பட்டுள்ள மேற்கு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தினக் கூலிக்கு செல்பவர்கள் தான். எனவே இந்த பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பத் தினருக்கு தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசி, 400 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை இல வசமாக வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. நாளை (புதன் கிழமை) இந்த பொருட்கள் அவர்களின் வீடு தேடி வழங்கப்படும். எனவே பொது மக்கள் யாரும் கும்பலாக வர தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்