ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண உதவி

ரேஷன்கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று ரூ.1000, அத்தியாவசிய பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.

Update: 2020-04-02 22:15 GMT
பரமக்குடி, 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா அத்தியாவசிய பொருட்களும், ரூ.1000 நிவாரணமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த திட்டத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமையில் சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

வேந்தோணி, வாகைக்குளம், அரியனேந்தல் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி யூனியன் தலைவர் சிந்தாமணி முத்தையா, துணை தலைவர் சரயு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று ரூ.1000, அத்தியாவசிய பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், அரியனேந்தல் ஊராட்சி தலைவர் மணிமுத்து, துணை தலைவர் பாப்பா சிவக்குமார், அ.தி.மு.க. நிர்வாகி ஓவியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்