தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2020-04-02 22:00 GMT
தூத்துக்குடி, 

இலங்கையில் இருந்து கொரோனா பாதித்தவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரத்தில் கூடுதல் ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் வெளி நாடுகளில் இருந்து யாரேனும் வருகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். அதே போன்று தோணி மூலம் வெளிநாட்டினர் வருகிறார்களா என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

அதே போன்று மீனவ கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடலோர பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்