குடிநீருக்காக காத்துக்கிடக்கும் கிராம மக்கள்

கீழக்கரை அருகே தண்ணீர் பிடிக்க பெண்கள் காலி குடங்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2020-04-01 22:45 GMT
கீழக்கரை, 

கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் சின்ன பாலையரேந்தல், மோர்குளம், மருதன்தோப்பு, மாவிளாதோப்பு உள்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதிய அளவு குடிநீர் குழாய்கள் இருந்தும் அதில் தண்ணீர் வராததால் கீழக்கரை துணை மின் நிலையம் அருகில் குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். 

ஆனால் அங்கு 2 குழாய்கள் மட்டுமே உள்ளதால் தண்ணீர் பிடிக்க பெண்கள் காலி குடங்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீருக்காக தூக்கமின்றி இரவு பகலாக காத்துக்கிடக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்