144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தினமும் வெளியில் வரக்கூடாது - பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தினமும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2020-04-01 05:46 GMT
கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இதனை பொதுமக்கள் கடை பிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் போலீசாருடன் கள்ளக்குறிச்சியில் நேற்று ரோந்து வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் வாங்கிய பொதுமக்களை அவர் கடுமையாக எச்சரித்தார்.

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தினமும் வெளியில் வரக்கூடாது. ஒருமுறை வெளியே வந்தால், ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும், 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க வரும் போது சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் நகரம் முழுவதும் ரோந்து சென்றார். 

மேலும் செய்திகள்