ரெயில்கள் ஓடாததால் ரூ.178 கோடி இழப்பு - மேற்கு ரெயில்வே தகவல்

ஊரடங்கால் ரெயில்கள் ஓடாததால் ரூ.178 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2020-03-31 23:13 GMT
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

மும்பையில் 21-ந் தேதியில் இருந்து மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மும்பையே முடங்கி போய் உள்ளது. மும்பையில் தினமும் 80 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மின்சார ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் 29-ந் தேதி வரை மேற்கு ரெயில்வேக்கு ரூ.178 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை மண்டலத்தில் மட்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து உள்ளனர். அவர்களுக்கு ரூ.62 கோடியே 11 லட்சம் திரும்பி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்