அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வாருங்கள் பொதுமக்களிடம் அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்

அம்மாபேட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அப்போது உடன் சென்ற அமைச்சர் கே.சி.கருப்பணன், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் வெளியே வாருங்கள் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-03-30 22:00 GMT
அம்மாபேட்டை, 

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீதிகளில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சென்றார். அப்போது அவர் வீடுகளில் தனித்து இருந்து பொதுமக்களிடம், ‘அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்புடன் இன்னும் சில நாட்கள் தனித்திருங்கள். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் வெளியே சென்று வாருங்கள்’ என்று பொதுமக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார். பின்னர் சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் உணவு வழங்கினார்.

அமைச்சர் கே.சி.கருப்பணனுடன் பேரூராட்சி செயல் அலுவலர் வீ.ராமகிருஷ்ணன், நிலவள வங்கித் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பங்க் பாலு, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ராதா உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர்.

இதேபோல் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற சுகாதார பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்