கொரோனாவிலும் கருணை உள்ளம்: வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவு வழங்கிய பெண்
கொரோனா பீதியிலும் வீதிகளில் திரியும் நாய்களுக்கு கருணை உள்ளத்துடன் பெண் ஒருவர் உணவு வழங்கினார்.;
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதுவையில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.
இது ஒருபக்கம் இருந்தாலும் பொதுமக்களும் கொரோனா வைரசை ஒழிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சாணம், மஞ்சள் நீர் கரைசலுடன் வேப்பிலைகளை தங்களது வீட்டு வாசல் முன்பு வைத்து கொரோனாவை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புதுவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேப்பிலையை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தார். இதை பொதுமக்கள் வினோதமாக பார்த்தனர். நகரின் பல்வேறு இடங்களில் வேப்பிலை, மஞ்சள் பொடி உள்ளிட்டவை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினியை தெருக்கள், வீடுகளின் முன்பு தெளிக்கப்பட்டது.
நாய், பூனை, கிளி போன்றவை வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் ஆகும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வீதிகளில் திரியும் நாய்கள் உணவு எதுவும் கிடைக்காமல் சுற்றி சுற்றி வருகின்றன.
புதுவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக வீதிகளில் திரியும் தெருநாய்களுக்கு இருப்பிடம் தேடிச்சென்று உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கு அவரது மகன்கள் உதவியாக உள்ளனர். கொரோனாபீதியிலும் கருணை உள்ளத்தோடு வீதிகளில் திரியும் நாய்களுக்கு தவறாமல் உணவு அளித்த அந்த பெண்ணை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.