கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மது பிரியர்களுக்கு போலீசார் கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்து மது பானங்களை வாங்க அனுமதித்தனர்.
பாகூர்,
புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மது பார் மூடப்பட்டுள்ளது. பொழுது போக்கு இடங்கள், சுற்றுலாதலங்கள் மூடப்பட்டுள்ளன. வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எல்லை பகுதியிலேயே சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.
படையெடுப்பு
பஸ், ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க புதுவைக்கு படையெடுத்து வருகிறார்கள்.
புதுவை எல்லைப் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மது பாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. அதுபோல் தமிழக எல்லையை ஒட்டி புதுவை கரையாம்புத்தூரில் 4 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் மது அருந்த தடை விதிக்கப்பட்டாலும் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான ஏற்பாடு
இதனால் அங்கு உள்ள மதுக்கடைகளில் மது பாட்டில் வாங்க பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிறுவந்தாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களாக மது பிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் கரையாம்புத்தூர் போலீசார் மது பிரியர்களுக்கு வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஒரு மீட்டர் இடைவெளி
அதாவது மதுக்கடை வாயில்களில் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் போட்டு அதில் மது பிரியர்களை நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதனை கரையாம்புத்தூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதுபோல் மதுக்கடை ஊழியர்கள் சீருடை மற்றும் முக கவசம் அணிந்து மது பாட்டில்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தினமும் சீருடை மற்றும் முக கவசத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் எச்சரித்தனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் மது பிரியர்களுக்கும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் வியந்து பார்த்துச் சென்றனர்.