ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக, கர்நாடக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மற்றும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனரை கொண்டு உடல் வெப்பத்தை அறியும் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கர்நாடக மாநிலத்தையும் இணைக்கக்கூடிய அத்திப்பள்ளி எல்லையில் மருத்துவ பரிசோதனை பணிகளும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பரிசோதனை
இந்த பகுதியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முகாமிட்டு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார்கள். அத்தியாவசிய பணிகளுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பம் அறியும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு ஏதேனும் தொற்றுநோய் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அனுப்பப்படுகிறது. சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தங்கு தடையின்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 2 மாநில போலீசார் மற்றும் பிற துறை அலுவலர்கள் இங்கு 24 மணி நேரமும் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
விழிப்புணர்வு
இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு செய்து குறைக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் இருந்து, நோய் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், தாசில்தார் செந்தில்குமரன் மற்றும் டாக்டர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், போலீசார் உடன் இருந்தனர்.