பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று தமிழக-கர்நாடக எல்லையை கடக்கும் பயணிகள்
பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று பயணிகள் தமிழக-கர்நாடக எல்லையை கடக்கிறார்கள்.
அந்தியூர்,
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பஸ்கள் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லும் வாகனங்கள் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
அரசு பஸ்கள் அந்தியூர் அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லைப்பகுதில் இருக்கும் பாலாறு சோதனை சாவடி வரை செல்கின்றன. அங்கு கர்நாடக பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு திரும்பி வந்துவிடுகின்றன. இதேபோல் கர்நாடக பஸ்களும் பாலாறு சோதனை சாவடிக்கு முன்பாகவே தமிழக பயனிகளை இறக்கிவிட்டு செல்கின்றன.
வனப்பகுதியில் நடக்கிறார்கள்...
இந்தநிலையில் சத்தியமங்கலம், பர்கூர் பகுதியில் இருந்து கர்நாடகா செல்லவேண்டிய பயணிகள் பாலாறு சோதனை சாவடியில் இறங்கி அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து கர்நாடக எல்லைக்கு சென்று, அங்கு நிற்கும் அந்த மாநில பஸ்களில் செல்கிறார்கள்.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளும் நடந்து தமிழக எல்லைக்கு வந்து பஸ்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு வருகிறார்கள். மாலை நேரம் கடந்து செல்லும் பயணிகள்தான் வனப்பகுதியில் நடக்க முடியாமல் சோதனை சாவடியிலேயே பரிதாபமாக காத்திருக்கிறார்கள்.