தெருவில் வசிப்போர் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் தெருவில் வசிப்போர் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.;

Update: 2020-03-21 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாநகராட்சி பகுதியில் தெருவில் வசிப்போர் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆதரவற்றோர் விடுதியில் 

இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியும் என்பதன் அடிப்படையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மேலும், வீடுகள் இன்றி சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற நிலையில் உள்ள ஆதரவற்றோர்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வரும் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டியப்பேரி ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தங்கிக்கொள்ளலாம். இந்த தங்கும் விடுதியில் தங்குபவர்கள் அனைவருக்கும் பேட்டை அம்மா உணவகத்திலிருந்து காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தின் பின்புற வளாகத்திலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் சரோஜினி பார்க் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திலும், மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தின் அருகிலும் தங்கி உணவைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்