நெல்லையில் சிவன்கோவில்களில் சனி பிரதோ‌ஷ வழிபாடு 10 பக்தர்களுக்கு தான் அனுமதி

சிவன்கோவில்களில் நடைபெறுகின்ற வழிபாடுகளில் பிரதோ‌ஷ வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். இதிலும் சனி பிரதோ‌ஷத்திற்கு தனி சிறப்பு உண்டு.

Update: 2020-03-21 22:15 GMT
நெல்லை, 

சிவன்கோவில்களில் நடைபெறுகின்ற வழிபாடுகளில் பிரதோ‌ஷ வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். இதிலும் சனி பிரதோ‌ஷத்திற்கு தனி சிறப்பு உண்டு. அதாவது ஒரு ஆண்டு முழுவதும் கோவிலுக்கு சென்று சிவனையும், நத்தியையும் வழிபட்ட புண்ணியம். சனி பிரதோ‌ஷத்தில் வழிபட்டால் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று சனி பிரதோ‌ஷ வழபாடு அனைத்து சிவன் கோவில்களிலும் நடந்தது.

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர்கோவிலில் நேற்று சனி பிரதோ‌ஷத்தையொட்டி கைலாசநாருக்கும், நத்திக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பிரதோ‌ஷம் என்றால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் கொரொனா வைரஸ் தாக்குதலையொட்டி பக்தர்களை அதிக அளவில் கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறியதால் நேற்று பிரதோ‌ஷ வழிபாடு நடந்த நேரத்தில் கோவில் வாசல் பூட்டப்பட்டு இருந்தது. 10 பக்தர்கள் மட்டுமே அதாவது சப்பரம் தூக்கி செல்கின்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லையப்பர் கோவிலில் சனி பிரதோ‌ஷத்தையொட்டி சுவாமிக்கும், நத்திக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், சிவனடியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நெல்லை கருப்பந்துறை அழியாபதிஈசுவரர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் மாலை 3 மணிக்கே அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்து விட்டது. 

மேலும் செய்திகள்