கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-03-21 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை 

கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், இனாம் மணியாச்சி நாற்கர சாலை அருகில் மயானம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு 

 எனவே பஞ்சாயத்து சிறப்பு கூட்டத்தை கூட்டி, அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட பஞ்சாயத்து தலைவி, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்