சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்பவருடைய மகன் செல்வின் (வயது 24). இவர் தட்டடெழுத்து, சுருக்கெழுத்து பயின்று வந்ததாக கூறப்படுகிறது.
இவரும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி செல்வின் அந்த இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் கைது
பின்னர் இதுதொடர்பாக செல்வினை சந்தித்து, தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். அதற்கு செல்வின் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண், இதுபற்றி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்ததாக வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.