தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு கலெக்டர் அறிவிப்பு

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-03-21 22:00 GMT
நெல்லை, 

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

விளையாட்டு உபகரணங்கள் 

கடந்த 1–4–2018 முதல் 31–3–2019 வரையிலும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.

31–ந்தேதி கடைசி நாள் 

எனவே தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றவர்கள், தங்களது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வருகிற 31–ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) ‘மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, நெல்லை’ என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்