ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய புத்தர் சிலை
குழித்துறை ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய புத்தர் சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள ஜங்காமம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவர், நண்பர் அஜியுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வலை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது வலையில் புத்தர் சிலை ஒன்று சிக்கியது. அந்த சிலையை அவர்கள் மீட்டு, களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வலையில் சிக்கிய புத்தர் சிலை 5 கிலோ எடை இருந்தது. அதை போலீசார், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.