தாராபுரத்தில் நகராட்சி சாா்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்: சப்-கலெக்டா் பவன்குமாா் பங்கேற்பு

தாராபுரத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாமில் சப்-கலெக்டா் பவன்குமாா் பங்கேற்றார்.

Update: 2020-03-20 21:45 GMT
தாராபுரம்,

தாராபுரம் பஸ்நிலையத்தில் நகராட்சி சாா்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கான கொரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தாராபுரம் சப்-கலெக்டா் பவன்குமாா் தலைமை தாங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கினாா். அப்போது நகா்நல அலுவலா் மருத்துவா் லட்சுமி நாராயணன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் கை கழுவும் முறையை செய்து காண்பித்தனா். 

மேலும் பொதுமக்கள் வருகிற 31-ந் தேதி வரை வெளியூா் பயணங்களை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டனா். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அதிகாாிகள் கேட்டுக்கொண்டனா்.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா குறித்து அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து விடலாம் என்றும் தொிவித்தனா். இதில் தாராபுரம் நகராட்சி ஆணையாளா் சங்கா், துப்புரவு ஆய்வாளா்கள் ராஜ்மோகன், சங்கா், நகராட்சி பணியாளா்கள், பயணிகள் திரளாக கலந்துகொண்டனா்.

மேலும் செய்திகள்