வாலாஜா அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாலாஜாவில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-20 22:30 GMT
வாலாஜா, 

மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும், டாக்டர்கள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சை பிரிவு, தனி சிகிச்சை பிரிவு ஆகியவை குறித்து மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை முழுவதும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலு உள்பட டாக்டர்கள், மருத்துவமனை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்