லத்தூர் ஒன்றியத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

லத்தூர் ஒன்றியத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2020-03-19 22:00 GMT
கல்பாக்கம், 

லத்தூர் ஒன்றியம் தச்சூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் கிடைக்க ஏற்பாடு

தகவலறிந்த அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்பட போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்