கொரோனா வைரஸ் எதிரொலி: வெளிமாநில பக்தர்கள் வருகை குறைவால் பூண்டி மாதா பேராலயம் வெறிச்சோடியது
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வெளி மாநில பக்தர்கள் வருகை குறைவால் பூண்டி மாதா பேராலயம் வெறிச்சோடியது.;
திருக்காட்டுப்பள்ளி,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டன.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து பூண்டி மாதா பேராலயத்திற்கு பக்தர்களின் வருகை அடியோடு குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை இல்லாததால் பேராலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சிலுவைப்பாதை நிகழ்ச்சி ரத்து
பேராலய நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுக்கும் முறைகள் குறித்து விளம்பர பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் பேராலய நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் தினமும் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொள்கின்றனர். தவக்காலத்தையொட்டி நாளை(சனிக்கிழமை) மற்றும் 28-ந் தேதி நடைபெறும் புள்ளம்பாடி மற்றும் லால்குடி பங்கு மக்கள் கலந்து கொள்ளும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி வருகிற 31-ந் தேதி வரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேராலயத்தில் அறைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதேபோல கல்லணையிலும் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.