கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பொதுமக்களுக்கு கைகழுவும் பயிற்சி

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-03-19 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கைகழுவும் பயிற்சி 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பொதுமக்களுக்கு சோப்பு மூலம் சுத்தமாக கைகழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மினி பஸ்களில் தினமும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை லைசால் கரைசல் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், காஜா நஜ்முதீன், முருகன் மற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினசரி மார்க்கெட் 

இதேபோன்று கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், செயலாளர் நீதிராஜன், சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பால்ராஜ், ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம், அரசு நூலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோப்பு மூலம் சுத்தமாக கை கழுவுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் நாகராஜ், நூலகர் அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்