குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி வள்ளிநாயகம் சேலத்தில் நடந்த விழாவில் பேசினார்.
சேலம்,
சேலம் நுகர்வோர் குரல் அமைப்பு சார்பில் உலக நுகர்வோர் தினவிழா சேலத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் பூபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். கவுரவ தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், சென்னை ஐகோர்ட்டு லோக் அதாலத் நீதிபதி வள்ளி நாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நீதிமன்றம் மூலம் நாடு முழுவதும் பல்வேறு வகையான வழக்குகள் சமரச பேச்சுகள் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. இந்த நீதிமன்றத்திற்கு வர வக்கீல் தேவையில்லை. பிரச்சினையை சந்தித்த இரு தரப்பினரையும் நேருக்கு நேர் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மன கஷ்டம் இல்லாமல் தீர்வு காணப்படும்.
ரூ.35 ஆயிரம் கோடி
பெரும்பாலும் விபத்துகள் தொடர்பான வழக்கில் தீர்வு காண அதிகமானோர் மக்கள் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு விபத்து வழக்குகளில் பைசல் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு கோடி வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
நீதிமன்றத்தில் நீண்ட காலமாக உள்ள வழக்குகள் தேக்கத்தை மக்கள் நீதிமன்றம் குறைக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொண்டால் அதன்பிறகு எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்ய முடியாது.
வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. இதுபற்றி தவறாக புரிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த சட்டத்தால் பாதிக்கப்படும் நபர் ஒருவர் முன்வந்து என்னுடன் பேச தயாரா?. வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் கூட தேசிய குடியுரிமை சட்டம் அமலில் இருக்கிறது. ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசு அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்து தான் செயல்படுத்தும்.
கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் சவாலாக உள்ளது. இதுபற்றி மக்களிடம் யாரும் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளில் தலைவர்கள் கூட தற்போது கைகளை குலுக்காமல் வணக்கம் கூறுகிறார்கள். இது தமிழக கலாசாரத்திற்கு கிடைத்த பெருமையாக கருத வேண்டும். உணவு பழக்க வழக்கங்களை சரியாக வைத்திருந்தால் நோய் வராமல் தடுக்க முடியும்.
இவ்வாறு நீதிபதி வள்ளிநாயகம் கூறினார்.