கொரோனா வைரஸ் பீதி: கோவையில் முககவசம், தெர்மா மீட்டர் கூடுதல் விலைக்கு விற்பனை
கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக கவசம் மற்றும் நவீன தெர்மா மீட்டர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். சோப்பு போட்டு கைகழுவவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் முககவசம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி கோவை நகரில் பல இடங்களில் மருந்துக்கடைகளில் முககவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் முககவசம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் இதுவும் கிடைப்பதில்லை. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
முககவசம் வாங்கச்சென்ற கோவையை சேர்ந்த வக்கீல் ஜேக்கப் என்பவர் கூறும்போது, ‘முககவசங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நானும் ரூ.50 கொடுத்து வாங்கினேன். மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்துக்கடைகளில் சோதனை நடத்தி செயற்கையான முறையில் விலையேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தெர்மா மீட்டர்
டாக்டர்கள் கூறும்போது, ‘கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சலை கண்டறிய சாதாரண தெர்மா மீட்டர் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவரை தொடாமலே காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை ஒளியை பாய்ச்சி கண்டறிய அல்ட்ராரெட் டிஜிட்டல் தெர்மாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது கோவையில் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.
கைகழுவ உபயோகப்படுத்தும் திரவ வடிவிலான சோப் ஆயிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். ‘சாணிடரி லோஷன்’ ஆயிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் உள்ளிட்ட பொதுமக்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்பதுபோல, இதுபோன்ற நேரங்களில் மருந்து மற்றும் தடுப்பு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் கோவையில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.