அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

Update: 2020-03-14 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் மாவட்ட தொடக்கநிலை சேவை மையம் மற்றும் விரிவுரை அரங்கம் ஆகிய 3 கட்டிடங்களின் திறப்புவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் வரவேற்று பேசினார்.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட 3 கட்டிடங்களை திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மருத்துவ துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துைண இயக்குனர்கள் யசோதாமணி, யோகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ அலுவலர் மீனா, சிவகங்கை ஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துைண தலைவர் கேசவன், அறங்காவலர் குழு தலைவர் மானாகுடி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த விபத்து சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சிவகங்கையிலும் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர பள்ளி குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இதுவரை பட்ட மேற்படிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசின் அனுமதியை பெற்று புதிய படிப்புகள் தொடங்கப்படும்.

இன்றைக்கு மிக பெரிய சவாலாக உள்ளது கொரோனா பிரச் சினை. தமிழகத்தை பொருத்தமட்டில் 45 வயது மதிக்கத்தக்க காஞ்சீபுரத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 2 கட்டமான பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்பது தெரியவருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளார். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு என்னுடைய நேரடி கண்காணிப்பில் உள்ள 8 பேருக்கும், கொரோனா பாதிப்பு குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை, அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 330 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்ற வசதிகளுடன் தனி வார்டுகள் ஏற்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியில் சென்று விட்டு வீடுகளுக்கு வந்தால் கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்