எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவித்த விடுமுறையில் மாற்றமில்லை மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவித்த விடுமுறையில் மாற்றமில்லை” என மதுரையில் நேற்று அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து அவர் மாலை 5.30 மணி அளவில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்களை மூட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். வணிக வளாகங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அதனை பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்சி ஆரம்பிக்காதபோது தேவையில்லாத கருத்தை தெரிவிக்கக்கூடாது. கட்சி ஆரம்பித்த பின் அதுதொடர்பான கருத்தை கூறுவோம்.
பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன் கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விடம் அதிக இடங்கள் கேட்போம் என கூறியிருக்கிறார். கட்சி வளர வேண்டும் என்ற ஆசையில் அவர் அப்படி கூறுகிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்சி தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி கட்சிகளிடம் கூடுதல் இடங்களை கேட்பது வழக்கம் தான். அதில் எந்த தவறும் இல்லை.
இது மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசனின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்து விட்டோம். இதுபோல், அ.ம.மு.க. அடுத்த தேர்தலுக்குப்பின் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். சிறுபான்மையின மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சட்டமன்றத்தில் அமைச்சர் உள்ளிட்டோர் தெளிவாக கூறிவிட்டோம். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. சிறுபான்மையினர் அச்சத்தை போக்க அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நேற்று காலையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த போது, விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, கலெக்டர் வினய் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் காரிலும், கப்பலூரில் இருந்து திறந்த ஜீப்பிலும் பயணித்த முதல்-அமைச்சருக்கு சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு கொடு்த்தனர்.
அதை தொடர்ந்து கப்பலூரில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் நாங்கள் வழங்கி வருகிறோம். ஏழை மக்களே இல்லையென்ற சூழ்நிலையை நிச்சயம் உருவாக்குவோம். இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை, பொய்யான கருத்தை, அவதூறான கருத்தை, விஷம தக்க கருத்தை பரப்பி வருகின்றனர். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு. நான் உங்களை போல் கிராமத்திலிருந்து பிறந்து வளர்ந்து இன்றைக்கு முதல்-அமைச்சராக வந்திருக்கி்றேன்.
கிராமம் சூழ்ந்த எல்லாபகுதிகளிலும் தைப்பொங்கல் பொங்க வேண்டும் என்பதற்காக தைத்திருநாள் பரிசு ஆயிரம் ரூபாயை அனைத்து குடும்ப அட்டைகளுக்கு வழங்கிய அரசு எங்கள் அரசு.
அதுபோல கிராமத்தில் உள்ளவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளோம். இதற்கு பாரத பிரதமர் அடிக்கல் நாட்டி சென்றார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடங்க இருக்கிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள உயர்சிகிச்சை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலும் கிடைக்கும். இது சாதாரண விஷயமல்ல. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து சிகிச்சை பெற வேண்டியதில்லை. ஒரு பைசா செலவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பெறலாம். இப்படி அற்புத திட்டங்களையெல்லாம் வழங்கும் இந்த அரசுக்கு என்றைக்கும் நீங்கள் துணையாக, ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே அவருக்கு கீழமாத்தூர்சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கப்பலூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து முதல்-அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெருங்குடி பகுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், நீதிபதி, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பேரவை நிர்வாகிகள் தமிழரசன், வெற்றிவேல், இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், செல்லப்பாண்டி, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, காரில் தி்ண்டுக்கல் புறப்பட்டு சென்று மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி விடுமுறைதான். மார்ச் 16-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தினம் மூத்த அமைச்சர்கள், வருவாய்த்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து இருக்கிறோம். அது குறித்த விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.